திருத்துறைப்பூண்டி,நவ.24:
ரசாயன உரம், பூச்சி மருந்து களால் உணவுப் பொருட்கள் நஞ்சாகி விட்ட தாக வேளாண் கருத்தரங்கில் கவலை தெரிவிக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ஆதிரெங்கம் கிரியேட் பயிற்சி ஆராய்ச்சி மையத்தில் பொறுப்பு கூட்டுக்குழு மகளிர் விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை, பாரம்பரிய நெல் சாகுபடி குறித்த பயிற்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழக இயற்கை உழவர் இயக்கத்தின் நன்னிலம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமை வகித்தார். பொறுப்புக் கூட்டுகுழு ஒருங்கிணைப்பாளர் அகிலா வரவேற்றார். நிகழ்ச்சியில் கிரியேட் பயிற்சி இயக்குநர் நெல் ஜெயராமன் பேசுகை யில்;
இயற்கை வேளாண்மையும் பாரம்பரிய நெல் சாகுபடியும் தமிழகத்தில் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் ரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லி விஷங்களாலும் உற்பத்தியாகும் உணவுகள் நஞ்சாக மாறிவிட்டது. இதனால் பொதுமக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகியுள்ளனர். உணவே மருந்து மருந்தே உணவு என்பது நம்முடைய பாரம்பரிய நெல் ரகங்களில் உள்ளது.
அதை இயற்கை தொழில் நுட்பமான பஞ்சகவ்யா, மூலிகை பூச்சிவிரட்டி பயன்படுத்தி நஞ்சில்லா உணவு உற்பத்தி செய்ய முடியும். சந்தையில் விற்பனை வாய்ப்பும் உள்ளது. இயற்கை வேளாண்மையில் உற்பத்தி செய்யப்படும் எந்த பொருளையும் மதிப்பு கூட்டி விற்பனை செய்ய வேண்டும் அதாவது விதை நெல், அவுல், அரிசியாக விற்பனை செய்ய முடியும் என்றார்.
பயிற்சியில் பொறை யார், தரங்கம்பாடி, நாகை, திருவாரூர் பகுதிகளிலிருந்து பொறுப்புகூட்டுகுழு மகளிர் விவசாயிகள் கலந்து கொண் டனர். பயிற்சியில் இயற்கை இடுபொருள் தயாரிப்பு, மண்புழு உரம் தயாரிப்பு, அசோலா பயன்பாடு, குறித்தும் பயிற்சியளிக்கப்பட்டது. மேலும் பாரம்பரிய நெல்சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து வயல்களில் நேரடி கள ஆய்வு நடந்தது. கிரியேட் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment