Nov 24, 2014

இருமடங்கு விலையுடன் தடைமீறி போதை பாக்கு விற்பனை

கோவை, நவ.24:
வாயில் மெல்லும் போதை புகையிலை, பான் மசாலா பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்து 7 மாதங்களாகி விட்டது. ஒட்டு மொத்த விற்பனை கிடங்கு, கடைகளில் ரெய்டு நடத்தப்பட்டு 13 டன் பான் மசாலா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மண் தோண்டி அதில் பான் பராக், குட்கா, ஹான்ஸ் போன்றவற்றை மூடியும், போதை வஸ்துக்களின் வரத்து குறையவில்லை. மாவட்ட அளவில் ரகசியமாக பான் பொருட்கள் விற்கப்படுகிறது.
ஆர்.எஸ்.புரம், காந்திபுரம், உக்கடம் உள்ளிட்ட பகுதியில் உச்ச கட்ட போதை தரும் 420 பீடாக்கள் சுவையாக வழங்கப்படுகிறது. பாக்கெட்டுகளில் வெளிப்படையாக வழங்கினால் சுகாதார துறை, போலீசாரின் கண்ணில் மாட்டிக்கொள்ளும் நிலையிருப்பதால் போதை பொருட்களை ரகசியமாக பேப்பரில் மடித்து வழங்குகிறார்கள். தடை போட்டதால் போதை பாக்குகளின் விலை இருமடங்கு ஏற்றி விட்டார்கள். அனைத்து பகுதியிலும் போதை புகையிலைகள் விற்கப்படுகிறது

No comments:

Post a Comment