Oct 29, 2014

உணவு பாதுகாப்பு சட்டத்தை கண்டித்து 31ல் ஆர்ப்பாட்டம்


குன்னூர், அக் 29:
உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தை கண்டித்து நீலகிரி மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் வரும் 31ம் தேதி ஊட்டி ஏடிசி சுதந்திர திடலில் நடக்கிறது. இதற்கு மாவட்ட வணிக சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட தலைவர் பரமேஸ்வரன் தலைமை வகிக்கிறார். மாநில இணை செயலாளர் அப்துல்ரசீது, மாவட்ட செயலாளர் ரகீம், பொருளாளர் ஜான், துணைத்தலைவர்கள் முஸ்தபா, ரவிக்குமார், முகமது ஜாபர், தாமஸ், சிவசண்முகம், கவுரவ ஆலோசகர்கள் ரமேஷ்கேம்சந்த், முகமது பாருக், சிவன், ராஜா முகமது, தங்கவேல், இணை செயலாளர்கள் வின்சென்ட், ஆனந்த்குமார், சிவக்குமார், குணசேகரன், ஜெயராமன், ரெக்ஸ்மணி, ஜபரூல்லா, மற்றும் மாவட்ட அனைத்து சங்க நிர்வாகிகள் முன்னிலையில் நடக்கிறது.

No comments:

Post a Comment