Oct 29, 2014

20 லட்சம் மதிப்பிலான 648 மூட்டை ஜவ்வரிசி பறிமுதல் உணவு பாதுகாப்புதுறை அதிகாரி அதிரடி



சேலம், அக்.29:
சேலத்தில், ஜவ்வரிசி தயாரிப்பில் கெமிக்கல் பவுடரை கலப்பதாக வந்த புகாரை அடு த்து 648 மூட்டை ஜவ்வரிசி பறிமுதல் செய்யப்பட்டன.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஜவ்வரிசி ஆலை களில், ஜவ்வரிசி வெளிர் நிறமாக வருவதற்காக தயாரிப்பின் போது கெமிக்கல் கலக்கப்படுவதாக புகார்கள் வந்தன. இதனையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஜவ்வரிசி ஆலைகளில் ஆய்வுகள் மேற்கொண்டு, கலப்படம் செய்யப்பட்ட ஆலைகள் மீது நடவடிக்கை எடுத்தனர்.
இந்நிலையில், நேற்று சேலம் செவ்வாய்பேட்டை நரசிம்ம செட்டி தெருவில் உள்ள ஒரு குடோனில் இருந்து, கெமிக்கல் கலந்து தயாரிக்கப்பட்ட ஜவ்வரிசி மூட்டைகள் விற்பனை செல்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனு ராதா, அங்கு வெளியூருக்கு அனுப்புவதற்காக லாரியில் தயாராக வைக்கப்பட்டிருந்த மூட்டைகளை சோதனையிட்டார்.
இதுகுறித்து சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா கூறியதாவது:
சேலம் மாவட்டத்தில் உள்ள ஜவ்வரிசி உற்பத்தி செய்யப்படும் ஆலைகளில் கடந்த மாதங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது ஜவ்வரிசி தயாரிப்பில் திரவமாக கெமிக்கல் கலப்படம் செய்யப்படுவது, கண்டுபிடிக்கப்பட்டு ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதேபோல் செவ்வாய்பேட்டையில் உள்ள ஒரு குடேனில் மேற்கொண்ட திடீர் ஆய்வில், ஜவ்வரிசியை வெளிர் நிறமாக மாற்ற கெமிக்கல் பவுடரை உபயோகப்படுத்தியது தெரியவந்துள்ளது. இதனால் இங்கிருந்து வெளியூருக்கு அனுப்புவதற்கு தயாராக வைக்கப்பட்டிருந்த தலா 50 கிலோ எடைகொண்ட 648 ஜவ்வரிசி மூட்டைகள் பறிமுதல் செய்துள்ளோம். இதன் மதிப்பு 20 லட்சமாகும்.
இவற்றின் மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்பி, வரும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

1 comment:

  1. சிறப்பான செயல்பாடு ! பாராட்டுக்கள் !!!

    ReplyDelete