திருவாடானை, ஆக. 8:
திருவாடானையில் உள்ள ஓட்டல்களில் சுகாதாரம் குறைபாடு உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதை தடுக்க வேண்டிய அதிகாரிகள் மெத்தனமாக உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
திருச்சி& ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் திருவாடானை உள்ளது. ஏராளமான வெளியூர் பயணிகள் இங்கு வருகின்றனர். தாலுகா அலுவலகம், நீதிமன்றம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உட்பட அனைத்து அலுவலகங்களும் இங்கு இருப்பதால் தினமும் அலுவல் சம்பந்தமாக சுற்று பகுதியினர் ஏராளமானோர் வருகின்றனர். அதிக மக்கள் வந்து செல்வதால் மற்ற கடைகளை விட சிறிய ஓட்டல்கள், ரோட்டோர கடைகளில் நல்ல வியாபாரம் நடக்கிறது..
பிரியாணி, இட்லி, தோசை, புரோட்டா என காலை, மாலை, இரவு நேரங்களில் விற்பனை செய்யப்படுகிறது. பல ஓட்டல்களில் சுத்தம் செய்யப்படாத மேஜை, கழுவப்படாத கிளாஸ், தூசுகளுடன் குடிநீர் தொட்டி, வாழை இலைக்கு பதிலாக பிளாஸ்டிக் பேப்பரில் உணவு, மட்டமான சாம்பார், சட்னி, சால்னா என வினியோகம் செய்யபடுவதால் சாப்பிடு வரும் பொதுமக்கள் அதிருப்தியடைந்து செல்கின்றனர்.
இதுபோன்ற மட்டமான உணவுகளால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்தா லும் வேறு வழியில்லாமல் இந்த ஒட்டல்களில் உணவு சாப்பிட்டு செல்கின்றனர். இங்கு உள்ள சுகாதாரமற்ற ஒட்டல்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘திருவாடானை வளர்ந்து வரும் பகதியாக உள்ளது. இங்குள்ள ஓட்டல்கள், சாலையோர கடைகள் சுகாதரம் மிகவும் மோசமாக உள்ளது.
குறிப்பிட்ட ஒருசில ஒட்டல்கள் தவிர பல ஒட்டல்களில் உள்ளே நுழையவே அருவெறுப்பாக உள்ளது. பாத்திரங்கள் சரியாக கழுவப்படாததும், ஏற்கனவே வடை பச்சி சுட பயன்படுத்திய எண்ணையை மீண்டும் பயன்படுத்துவதும் தொடர்கிறது. சுகாதாரத்தறை அதிகாரிகள் மெத்தன போக்கை கைவிட்டு பொதுமக்கள் நலன் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
No comments:
Post a Comment