கருங்கல், ஆக. 8:
கிள்ளியூர் வட்டார சுகாதார மேற்பார்வை யாளர் ஜெயக்குமார் தலைமையில் சுகாதார அதிகாரிகள் முருகன், நாராயணமூர்த்தி, செல்வராஜ், ஜீவகுமார், தினேஷ்குமார் ஆகியோர் அடங்கிய அதிகாரிகள் குழு மார்த்தாண்டம், கருங்கல் பகுதி உணவு விடுதிகளில் நேற்று திடீர் சோதனை நடத்தினர். மார்த்தாண்டம் பகுதி யில் உள்ள ஓட்டல்களில் சோதனை நடத்திய போது சில குறைபாடுகளை கண்ட றிந்தனர். தானியங்கள் மற்றும் உணவுப்பொருட்களை மூடி வைத்து பயன்படுத்த வேண்டும். பாத்திரங்களை சுடுநீரிலும் கழுவ வேண்டும் என அறிவுறுத்தினர். இதே நிலை தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். இது போல் கருங்கல் பகுதி ஓட்டல் களிலும் சோதனை நடத்தினர்.
No comments:
Post a Comment