பண்ருட்டி, ஆக. 8:
அண்ணாகிராமம் உணவு பாதுகாப்பு அலுவலர் கந்தசாமி தலைமையிலான குழுவினர் பைத்தாம்பாடி, சத்திரம், காவனூர், உளுந்தாம்பட்டு ஆகிய கிராமங்களில் உள்ள பள்ளி சத்துணவு மையம், அங்கன்வாடி மையம், கூட்டுறவு நியாய விலைக்கடைகள், பெட்டி கடைகள், தேனீர் கடைகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில் தயாரிக்கப்படும் உணவுகளை ஆய்வு செய்தார்.
அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என எச்சரித்தனர். கலப்பட டீ தூள் பயன்படுத்தியதை கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.
No comments:
Post a Comment