சேலம், ஜூலை 10:
சேலத் தில் ரசாயனம் மற்றும் மக் காச்சோள மாவு பயன்படுத் திய சேகோ ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.
சேலம் அயோத்திபட் டணம் அடுத்த மின்னாம் பள்ளி செல்லியம்பாளையத் தில் தனியார் சேகோ அண்டு ஸ்டார்ச் பேக்டரி இயங்கி வருகிறது. அண்ணாதுரை என்பவர் இதன் உரிமையாள ராக உள்ளார். இந்த பேக்டரி யில் கடந்த 3 மாதங்களுக்கு முன் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப் போது ஜவ்வரிசி மற்றும் ஜவ்வரிசி தயாரிக்க பயன் படுத்தப்பட்ட ஈரமாவு ஆகிய வற்றின் மாதிரி எடுத்து சோதனை செய்ததில், அதில் மக்காச்சோள மாவு கலந்திருப் பது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து ஆலையின் உரிமையாளருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆலையில், ஜவ்வரிசி தயாரிப் பில் தொடர்ந்து மக்காச்சோள மாவு கலப்படம் செய்வதாக, மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் உணவு பாது காப்பு துறை நியமன அலு வலர் டாக்டர் அனு ராதா தலைமையிலான குழு வினர், நேற்று அந்த ஆலை யில் சோதனை மேற் கொண்டனர்.
இதில், ஆலையில் ரசா யனம் பயன்படுத்தி வருவதும், மக்காச்சோள மாவு கலப் படம் செய்வதும் கண்டுபிடிக் கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் ஆலையை பூட்டி சீல் வைத்தனர்.
இது குறித்து உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் அனுராதா கூறுகையில், �‘இந்த ஆலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பே மக்காச்சோள மாவு கலப்படம் செய்வது கண்ட றியப்பட்டு, ஆலை உரிமையா ளருக்கு எச்சரிக்கை விடுக்கப் பட்டது. ஆனால் தொடர்ந்து மக்காச்சோள மாவு பயன் படுத்தி வருவதால், ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஜவ்வரிசி, ஈரமாவு உள்ளிட்டவை மாதிரி எடுக்கப்பட்டு, சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் முடிவு கிடைத்ததும், மாவ ட்ட வருவாய் அலுவலரிடம் குற்றப்பத் திரிக்கை தாக்கல் செய்யப்படும்,’’ என்றார்.
No comments:
Post a Comment