Jun 27, 2014

கோவில்பட்டி மார்க்கெட்டில் காலாவதி மளிகை பொருட்கள் மிட்டாய்கள் பறிமுதல் சப்&கலெக்டர், அதிகாரிகள் அதிரடி


கோவில்பட்டி, ஜூன் 27:
கோவில்பட்டி நகராட்சி தினசரி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் சப்& கலெக்டர் தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரி கள் நடத்திய அதிரடி சோதனையில் காலாவதியான குளிர்பானங்கள், மிட்டாய்கள், முறுக்கு பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
கோவில்பட்டி நகராட்சி தினசரி மார்க்கெட்டில் நேற்று காலையில் சப்& கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமையில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ஜெகதீஸ் சந்திர போஸ் முன்னிலையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பொன்ராஜ், மாரிச்சாமி, சிவபாலன், நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் சீனிராஜ், சுரேஷ், காஜாமுகைதீன் ஆகியோர் கொண்ட குழுவினர் பழக்கடை, மளிகை கடை, வாழைத்தார் கடை, குளிர்பான கடை மற்றும் மிட்டாய் கடைகள் என ஒவ்வொரு கடையாக சென்று காலாவதியான மற்றும் தயாரிப்பு முகவரி இல்லாமல் பொருட்கள் விற்கப்படுகிறதா? என அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின்போது பெரும்பாலான கடைகளில் காலாவதியான, முகவரி இல்லாமல் குளிர்பானங்கள், மிட்டாய்கள், முறுக்கு மற்றும் மிட்டாய் பாக்கெட்டுகள், மீல்மேக்கர், பச்சை மற்றும் வறுத்த பட்டாணி, வெண்ணிலா மிட்டாய்கள், அழுகிய வாழைப்பழங்கள், சிப்ஸ் மற்றும் அப்பள பாக்கெட்டு களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, அதிகாரிகள் குழுவினர் கோவில்பட்டி அண்ணா பஸ்நிலைய பகுதியில் உள்ள டீக்கடைகள், ஓட்டல்களில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை செய்தனர். இதில் பெரும்பாலான டீக்கடைகளில் திறந்தவெளியில் தூசு படும் வகையில் வைக்கப்பட்டிருந்த ஏராளமான வடை களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் லாரியில் ஏற்றப்பட்டு நகருக்கு வெளியில் உள்ள காட்டுப்பகுதியில் நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் மூலம் அழிக்கப்பட்டது.

No comments:

Post a Comment