தென்காசி, ஜூன் 27:
குற்றாலத்தில் காலாவதியான உணவு பொருட்களை உணவு பாதுகாப்பு துறை யினர் பறிமுதல் செய்து அழித்தனர்.
குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு செய்து கொடுக்க வேண்டிய வசதிகள் குறித்து 31 நிபந்தனைகளை அமல்படுத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அருவிகளில் சோப்பு, ஷாம்பு போட்டு குளிக்க கூடாது, சுற்றுலாபயணிகளுக்கு தரமான உணவு பொருட்கள் கிடைக்க வழி செய்யவேண்டும் ஆகியவை இதில் முக்கியமான அம்சங் களாகும்.
உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலியாக குற்றாலத் தில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் கருணாகரன் மற்றும் அதிகாரிகள் முகைதீன்அப்துல்காதர், கருப்பசாமி, மகேஸ்வரன், மகாராஜன், மோகன்குமார், ராஜநயினார், மாரியப்பன், நாகசுப்பிரமணியன், நாக ராஜன் ஆகியோர் நேற்று சோதனை திடீர் நடத்தினர்.
இதில் விற்பனைக்கு வைத்திருத காலாவதியான குளிர்பானங்கள், சிப்ஸ், தின்பண்டங்கள், பாதாம் பால் பவுடர் ஆகியவற்றை பறிமுதல் செய்து அழித்தனர்.
மேலும் டீக் கடை களில் வடை உள்ளிட்ட தின்பண்டங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் எண்ணெயின் தரத்தையும் சோதனை செய்து தரமற்ற பொருட்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்து அழிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.40 ஆயிரம் ஆகும்.
குற்றாலத்தில் காலாவதியான தின்பண்டங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அழித்தனர்.
No comments:
Post a Comment