வடலூர், ஜூன் 27:குறிஞ்சிப்பாடி
பகுதியில், மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் ராஜா தலைமையில் குறிஞ்சிப்பாடி உணவு பாதுகாப்பு அதிகாரி சுப்பிரமணியன், காட்டுமன்னார்கோவில் உணவு பாதுகாப்பு அதிகாரி கொளஞ்சியப்பன் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஓட்டல்கள், பழக்கடைகள், குளிர்பான கடைகள் உள்ளிட்ட கடைகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது தரமான பொருட்களை கொண்டு உணவு தயாரிக்கவும், சமையலறை மற்றும் சாப்பிடும் இடங்களை சுகாதாரமாக வைத்துக் கொள்ளவும், பணியாளர்கள் தூய்மையான ஆடைகளை அணியவும், மருத்துவ தகுதி சான்றிதழ் பெறவும், பாதுகாப்பான குடிநீர் வழங்கவும், கார்பைடு கல் வைத்து பழுக்க வைத்த மாம் பழங்களை விற்கவும் சாப்பிடவும் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் தரமற்ற கலர் பவுடரை கொண்டு தயாரிக்கப்பட்ட பழச்சாறுகள், காலாவதியான மற்றும் தேதி குறிப்பிடாமல் விற்பனை செய்த உணவு பொருட்களை கொட்டி அழித்தனர்.
No comments:
Post a Comment