May 26, 2014

போதை பொருட்கள் விற்பனை வாழப்பாடியில் அதிரடி ஆய்வு

வாழப்பாடி: வாழப்பாடி பகுதியில், போதை பொருட்களை விற்பனை செய்தது தொடர்பாக, 26 பேர் மீது, போலீஸார் வழக்குபதிவு செய்தனர். வாழப்பாடி, காரிப்பட்டி, ஏத்தாப்பூர், கருமந்துறை மற்றும் கரியகோவில் பகுதியில் உள்ள கடைகளில், தடை செய்யப்பட்ட போதை பொருட்களான, பான்பராக், குட்கா, ஹான்ஸ் ஆகியவை விற்பனை செய்வதாக வந்த தகவலையடுத்து, போலீஸார் அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர். வாழப்பாடியில், போதை பொருட்களை விற்பனை செய்த இளையராஜா, 31, மேட்டுடையார் பாளையம் திருமுருகன், 32, பேளூர் பிரிவுரோடு சரவணன், 32, குமார், 30, ராமச்சந்திரன், 47, பெரியசாமி, 70, சரவணன், 36, எழில்நகர் சவுந்திரராஜன், 50, கிருஷ்ணராஜ், 33, முத்துகவுண்டர், 64, சரவணன், 29, ஆகிய ஒன்பது பேர் மீது, வாழப்பாடி போலீஸார் வழக்குபதிவு செய்தனர். காரிப்பட்டி பகுதியில், போதை பொருட்களை விற்பனை செய்ததாக, சுந்தர்சிங், 50, வேதம்மாள், 48, மல்லிகா, 47, ராஜம்மாள், 68, தங்கவேல், 63, ஆகிய ஐந்து பேர் மீதும், ஏத்தாப்பூர் பகுதியில் சீனிவாசன், 33, தியாகராஜன், 30, ஜெயராமன், 58, பழனிமுத்து, 40, சசிகுமார், 26, ஆகிய ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கருமந்துறை பகுதியில், தீர்த்தன், 40, ஜெயபிரபு, 54, ரத்தினம், 27, பாஸ்கரன், 24. சின்னையன், 40, ஆகிய ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மாவட்டம் முழுவதும் அதிரடி புகையிலை பொருட்கள் விற்பனை 178 கடைகள் மீது வழக்கு பதிவு 
சேலம், மே 23:
சேலம் மாவட்டத்தில் தடையை மீறி புகை யிலை பொருட்களை விற்ற 175 கடைகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் புகையிலை, குட்கா உள்ளிட்ட பொருட் கள் விற்பனைக்கு அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளின் அருகில் உள்ள கடைகளில் தடையை மீறி புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. ஆனால் இதனை போலீசார் கண்டுகொள்ளாமல் இருந்து வந்தனர்.
இந்நிலையில் கடைகளில் ஆய்வு செய்ய போலீசாருக்கு எஸ்பி சக்திவேல் அதிரடியாக உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சேலம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளின் அருகில் உள்ள கடைகளில் போலீசார் ஒரே நேரத்தில் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர்.
சோதனையின் போது தடையை மீறி புகை யிலை பொருட்களை விற் பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு 175 கடைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டன.
சேலத்தில் 31 கடைகளிலும், சங்ககிரியில் 24 கடைகளிலும், ஆத்தூரில் 34 கடைகளிலும், மேட்டூரில் 29 கடைகளிலும், வாழப்பாடியில் 22 கடைகளிலும், ஓமலூரில் 32 கடைகளிலும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. இந்த கடை உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டது. தொடர்ந்து போலீசார் கடை களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


ஆத்தூரில் குட்கா, போதை பொருட்கள் விற்ற 10 பேர் மீது வழக்கு
ஆத்தூர், மே 23:
ஆத்தூரில் தடைசெய்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 10பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் பஸ் ஸ்டாண்ட், கடை வீதி, ராணிப்பேட்டை, முள்ளுவாடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பீடாக்கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் பராக், சாந்தி உள்ளிட்ட குட்கா பாக்குகள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக ஆத்துர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து நேற்று ஆத்தூர் எஸ்ஐ பழனியம்மாள் தலைமையிலான போலீசார் ஆத்தூர் நகரில் உள்ள பீடாக்கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது தடை செய்யப்பட்ட குட்கா பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. இது தொடர்பாக 10 கடைகாரர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பான்பராக், குட்கா விற்ற 7 பேர் மீது வழக்குபதிவு
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி மற்றும் மல்லூரில், தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்த ஏழு பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். தமிழகத்தில், பான்பராக், குட்கா, ஹான்ஸ் போன்ற போதை தரும் பொருட்கள், புகையிலை பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், மளிகைக் கடைகள், பீடா கடைகள், டீக்கடைகளில், இவைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பனமரத்துப்பட்டி பஸ் ஸ்டாண்ட், திருவள்ளுவர் சாலை, இச்சமரம், காந்தி நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகள், பீடா கடைகள், டீக்கடைகளில், பனமரத்துப்பட்டி போலீஸார், அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, விற்பனை செய்ய, பதுக்கி வைத்திருந்த பான்பராக், குட்கா போன்ற போதை பொருட்களை, போலீஸார் பறிமுதல் செய்தனர்.
* மல்லூர் பஸ் ஸ்டாண்ட், வீரபாண்டி ரோடு, மேட்டூர் ரோடு, மாரியம்மன் கோவில் தெரு ஆகிய இடங்களில் உள்ள மளிகைக் கடைகள், டீக்கடைகள், பீடா ஸ்டால்களில், போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில், போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக, ஏழு பேர் மீது, போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment