சென்னை, ஆக.27-தமிழகம்
முழுவதுமுள்ள குடிநீர் விற்பனை செய்யும் நிறுவனங்களின் குடிநீரை ஆய்வு
செய்து செப்டம்பர் 4-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவில்லை என்றால்
மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்
என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை விடுத்துள்ளது.வழக்குசென்னை
மற்றும் புறநகர் பகுதிகளில், பாட்டில் மற்றும் பாக்கெட் குடிநீர் விற்பனை
செய்யும் நிறுவனங்கள் அனுமதியின்றியும், தரம் குறைந்த குடிநீரை
பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதாகவும் செய்தி வெளியானது. சென்னையிலுள்ள
தென்மாநிலத்துக்கான தேசிய பசுமை தீர்ப்பாயம், இந்த செய்தியின்
அடிப்படையில், தாமாக முன்வந்து (சூமோட்டோ) வழக்குப்பதிவு செய்தது.பின்னர்,
தமிழகம் முழுவதுள்ள குடிநீர் விற்பனை செய்யும் நிறுவனங்களில் உள்ள
குடிநீரை பரிசோதனை செய்து, ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்யும்படி, தமிழ்நாடு
மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டது.6 மாவட்டங்களின் அறிக்கைஇந்த
நிலையில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதிபதி எம்.சொக்கலிங்கம்,
தொழில்நுட்ப உறுப்பினர் பேராசிரியர் ஆர்.நாகேந்திரன் ஆகியோர் முன்பு இந்த
வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின்
சார்பில், 6 மாவட்டங்களில் உள்ள குடிநீர் விற்பனை செய்யும் நிறுவனத்தில்
நடந்த ஆய்வுகளின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.இதையடுத்து நீதிபதி
சொக்கலிங்கம், பேராசிரியர் நாகேந்திரன் ஆகியோர் கூறியதாவது:-தமிழகத்தில்
உள்ள அனைத்து மாவட்டங்களில் செயல்படும் குடிநீர் விற்பனை செய்யும்
நிறுவனங்களில் உள்ள குடிநீரை பரிசோதனை செய்து, அந்த அறிக்கையை இன்று
தாக்கல் செய்யவேண்டும் என்று இந்த தீர்ப்பாயம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.அபராதம் விதிக்கப்படும்ஆனால்,
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வுகளை
மேற்கொண்டு, அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. எனவே இந்த வழக்கை செப்டம்பர்
4-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அன்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில்
உறுப்பினர் செயலாளர் நேரில் ஆஜராகி, ஆய்வு அறிக்கையை தாக்கல்
செய்யவேண்டும்.அவ்வாறு தாக்கல் செய்யவில்லை என்றால், மாசுக்கட்டுப்பாட்டு
வாரியத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். மேலும், மாவட்ட அளவில்
பணியாற்றி வரும் மாவட்ட சுற்றுச்சூழல் என்ஜினீயர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம்
அபராதம் விதிக்கப்படும்.இவ்வாறு இருவரும் கூறினர்.
No comments:
Post a Comment