Jun 9, 2013

சேலத்தில் ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை

சேலம்
தமிழகத்தில் மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை கடைகளில் பான்பராக், குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்வதற்கு அரசு தடை விதித்துள்ளது. இந்தநிலையில், சேலம் தாதகாப்பட்டி கேட், நெத்திமேடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மொத்த குடோன் மற்றும் சில்லரை விற்பனை கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பாலு, திருமூர்த்தி, மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் சரவணன், சங்கர், சேகர் ஆகியோர் நேற்று மாலை அதிரடியாக சோதனை செய்தனர்.
அப்போது ஒரு மொத்த விற்பனை கடையில் சுமார் ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான பான்பராக், குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், வருகிற 22–ந் தேதிக்குள் அரசு உத்தரவுப்படி போதை பொருட்களை கடைகளில் இருந்து அகற்றிவிட வேண்டும் என்றும் கடைக்காரர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் அதிகாரிகள் வினியோகம் செய்தனர்.

No comments:

Post a Comment