Jun 8, 2013

விழுப்புரத்தில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள குட்கா, பான்மசாலா பொருட்கள் கைப்பற்றி அழிப்பு

விழுப்புரம்,
விழுப்புரத்தில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள குட்கா, பான்மசாலா பொருட்கள் கைப்பற்றி அழிக்கப்பட்டன.
குட்கா, பான்மசாலா பொருட்கள் விற்பனை
தமிழக முதல்அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளபடி குட்கா, பான்பராக், பான்மசாலா புகையிலை மற்றும் நிக்கோடின் கலந்த உணவுப்பொருட்கள் உற்பத்தி, சேமிப்பு, விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் இதுபோன்ற பொருட்களை விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டுமெனவும் இந்த பொருட்களை ஒரு மாத காலத்திற்குள் அப்புறப்படுத்த வேண்டுமெனவும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் விழுப்புரம் எம்.ஜி.ரோடு, பாகர்ஷா வீதி, காமராஜர் வீதி, கே.கே.ரோடு உள்ளிட்ட விழுப்புரம் நகரில் குட்கா, பான்மசாலா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் சுமார் 50க்கும் மேற்பட்ட கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் ஆறுமுகம் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் விழுப்புரம் சங்கரலிங்கம், விக்கிரவாண்டி ரவிக்குமார், திருவெண்ணை நல்லூர் முருகன், காணை சமரேசன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
ரூ.2 லட்சம் மதிப்பில் பொருட்கள் அழிப்பு
அப்போது மொத்த வியாபாரம் மற்றும் சில்லரை வியாபார கடைகளில் விற்பனைக்காக வைக்கப் பட்டிருந்த குட்கா, பான்பராக், பான்மசாலா மற்றும் 2 மூட்டை புகையிலை பொருட் கள் என சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றி அவற்றை அழித்தனர். மேலும் புகையிலை சார்ந்த பொருட்களை இன்னும் ஓரிரு வாரத்திற்குள் வாங்கிய கம்பெனிகளுக்கே திருப்பி அனுப்புமாறும் கடை வியாபாரிகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

No comments:

Post a Comment