நூடுல்ஸ் விற்பனைக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுபாட்டு அமைப்பு முடிவு செய் துள்ளது. மாகி நூடுல்ஸ் விவகாரத் தால் எழுந்த சர்ச்சைகளை அடுத்து இந்த புதிய கட்டுப்பாட்டை ஆணையம் கொண்டு வர உள்ளது.
இதன் மூலம் நூடுல்ஸ் உள்ளிட்ட பல்வேறு விதமான உடனடி சமையல் பொருட்களில் பொதுவான தரம் கடைபிடிக்கப்பட வாய்ப்புகள் உருவாகியுள்ளது.
இந்த புதிய கட்டுப்பாடுகளில் உணவுப் பொருட்களில் கலக்கப் படும் மோனோ சோடியம் குளுட்ட மேட் மற்றும் இதர பொருட்கள், சுவையூட்டிகள் எவ்வளவு சேர்க்க லாம் என்பதற்கு அளவு நிர்ணயிக்கப்படும். குறிப்பாக உடனடி நூடுல்ஸில் சேர்க்கப்படும் ரசாயன அளவுகளில் கட்டுப்பாடுகள் இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.
No comments:
Post a Comment