Aug 22, 2015

வெல்லத்திற்கும் தரநிர்ணய சான்று

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் நெய்க்காரப்பட்டி, கோவை பொள்ளாச்சி, நாமக்கல் பிலிக்கல்பாளையம், ஈரோடு சித்தோடு ஆகிய இடங்களில் புதன், சனிக்கிழமைகளில் வெல்லச் சந்தை நடக்கிறது. 
இங்கிருந்து வாரம் 60 டன் வெல்லம் தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கும், 50 டன் கேரளாவிற்கும் அனுப்பப்படுகின்றன. சமீபத்தில் தமிழகத்தில் விளையும் காய்கறிகளில் பூச்சிக்கொல்லி மருந்து இருப்பதாக கேரளா புகார் தெரிவித்தது. இதையடுத்து காய்கறிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை தரநிர்ணய சான்று வழங்குகிறது.
தற்போது தமிழகத்தில் தயாரிக்கப்படும் வெல்லத்தில் கலப்படம் இருப்பதாக சிலர் புகார் தெரிவித்துள்ளனர். விற்பனை பாதிக்காமல் இருக்க நெய்க்காரப்பட்டி வெல்லம் உற்பத்தியாளர்கள் தரநிர்ணய சான்று தரக்கோரி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளை அணுகியுள்ளனர். இதையடுத்து வெல்லத்திற்கு தரநிர்ணய சான்று வழங்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்ட உணவுபாதுகாப்பு நியமன அலுவலர் சாம்இளங்கோ கூறியதாவது: நெய்க்காரப்பட்டி பகுதியில் உற்பத்தியாகும் வெல்லம் தரமானது. இவற்றுடன் வெளிமாவட்ட வியாபாரிகள் கலப்பட வெல்லத்தை கலப்பதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். கலப்பட வெல்லத்தை தடுக்க தரநிர்ணயசான்று வழங்க முடிவு செய்துள்ளோம், என்றார்.

1 comment:


  1. Nice post...I look forward to reading more, and getting a more active part in the talks here, whilst picking up some knowledge as well..

    Dyes And Pigments Importers In Delhi

    ReplyDelete