Aug 22, 2015

'நூடுல்ஸ்' விளம்பர வழக்கு அமிதாப்பச்சன் மனு தள்ளிவைப்பு

மதுரை:'மேகி நுாடுல்ஸ்' விளம்பரம் தொடர்பாக இந்தி நடிகர் அமிதாப் மீதான வழக்கை, செப்., ௯க்கு மாநில நுகர்வோர் ஆணையம் மதுரை கிளை தள்ளிவைத்தது.
வழக்கறிஞர் மணவாளன் தாக்கல் செய்த மனு :இந்தியாவில் விற்கப்படும் 'மேகி நுாடுல்சில்' உடல் நலத்திற்கு கேடு விளைவிக்க கூடிய காரீயம் அதிகம் கலந்திருப்பது ஆய்வில் தெரியவந்தது. இதற்கு தடை விதிப்பதுடன், 'நுாடுல்ஸ்' விளம்பரத்தில் நடித்த நடிகர் அமிதாப் உட்பட நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மணவாளன் மனுவில் தெரிவித்திருந்தார்.
இம்மனு மீதான விசாரணை நேற்று உறுப்பினர்கள் அண்ணாமலை, முருகேசன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அமிதாப் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ''190க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். பல விருதுகளை பெற்றுள்ளேன். நுாடுல்ஸ் விளம்பரத்தில் 2012 ஜூன் 5முதல் 2013செப்., 5ம் தேதி வரை நடித்தேன். நான் நடித்தபோது யாரும் பிரச்னையைஎழுப்ப வில்லை. அதன்பிறகு ஏற்பட்ட இப்பிரச்னைக்கு நான் பொறுப்பேற்க முடியாது. எனவே இவ்வழக்கில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும்,'' என தெரிவித்திருந்தார்.மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பிறவிப்பெருமாள் பதில் மனு செய்ய கால அவகாசம் கோரினார். இதையடுத்து வழக்கு செப்., 9க்கு தள்ளிவைக்கப்பட்டது.

1 comment:


  1. Nice post...I look forward to reading more, and getting a more active part in the talks here, whilst picking up some knowledge as well..

    Dyes And Pigments Importers In Delhi

    ReplyDelete