மதுரை, பிப். 7:நுகர்வோருக்கு தரமான உணவு பொருள் கிடைக்க மத்திய அரசால் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006ல் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் வியாபாரிகள் உரிமம் பெற வேண்டும். இந்த உரிமம் பெறுவதற்கு இம்மாதம் 4ம் தேதி கடைசி தேதியாகும். இதற்கு காலநீடிப்பு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு உணவு பொருள்கள் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயபிரகாஷ், செயலாளர் வேலுசங்கர் ஆகியோர் டில்லியில் உள்ள மத்திய அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர். இதனை ஏற்று உணவு பாதுகாப்பு துறை உரிமம் பெற ஆறு மாதம் காலஅவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அப்பளம், வடகம், மோர்வத்தல் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் நல சங்க மாநில செயலாளர் திருமுருகன் கூறுகையில், வணிகர்கள் உரிமம் பெறுவதற்கு சில குறைபாடுகள் இருந்து வருகிறது. அதை போக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உரிமம் பெற ஆறு மாத கால அவகாசம் வழங்கியுள்ளனர். இதற்கு முயற்சி செய்த உணவு பொருள் வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்’, என்றார்.
No comments:
Post a Comment