மதுரை, பிப். 7:டெங்கு
காய்ச்சாலை தடுக்க உணவு பாதுகாப்பு மற்றும் மருந்தியல் துறை அதிகாரிகள் மதுரை நகரில் உள்ள ஓட்டல்கள், கடைகளில் திடீர் சோதனையிட்டனர். இதில் 20 கிலோ பழைய ஆட்டுக்கறி பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறை சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மதுரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவின் பேரில், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்தியல் துறை டாக்டர் சுகுணா தலைமை யில் பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் மாவட்டம் முழுவதும் டெங்கு கொசுக்கள் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 5 குழுக்களாக சென்ற அவர்கள் கடந்த 10 நாட்களாக ஓட்டல்கள், வியாபார தளங்களில் கொசுக்கள் உருவாகும் இடங்களை கண்டறிந்து மருந்துகளை தெளித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று நெல்பேட்டை பகுதியில் உள்ள 23 ஓட்டல்கள் உள்பட 48 இடங்களில் சோதனை நடத்தினர். இதில் 3 ஓட்டல்களில் 20 கிலோ பழைய ஆட்டுக்கறியை வைத்து பயன்படுத்துவதை கண்டறிந்து அதை பறிமுதல் செய்து அழித்தனர். இதுபோன்று தொடர்ந்து பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.
இந்த சோதனைகளில் பாதுகாப்பு அலுவலர்கள் ராஜா, சரவணன், முரளிதரன், மனோகரன், அம்ஜத் இப்ராகீம் கான் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment