புதுச்சேரி, பிப். 3:
உணவு பாதுகாப்பு ஆணையர் கந்தவேலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுவையில் கடந்த 2014 ஜனவரி முதல் அனைத்து உணவு சார்ந்த வணிகர்களுக்கு இணையம் மூலமாக உணவு உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு வருடம் முடிந்த நிலையில் புதுவை பிராந்தியத்தில் உணவு உரிமம், பதிவு சான்றிதழ் பெற்றவர்களின் எண் ணிக்கை மிகவும் குறை வாகவே உள்ளது.
உணவு சார்ந்த தொழில் முனைவோர் உரிய உணவு உரிமம், பதிவு சான்றிதழ் இல்லாமல் வணிகம் செய் வது தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே அனைத்து தரப்பு உணவு வணிகர்களும் விரைவாக உரிமம், பதிவு சான்றிதழ் பெற உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த சான்றிதழ் பெறுவதற்கான காலக்கெடு 4ம்தேதி (நாளை) இறுதி நாளாகும்.
மேலும் உணவு உரிமம் புதுப்பித்தல் செய்வோருக்கு காலக்கெடு முடிவதற்கு 60 நாட்களுக்கு முன்பாக உணவு வணிகர்களின் மின்னஞ்சல், கைப்பேசி குறுந்தகவலை கண்டு உடனடியாக முதல் 30 நாட்களுக்குள்ளாக உரிமத்தை புதுப்பிக்க வேண்டும். மாறாக அவ்வாறு செய்யா மல் காலம் கடந்து 31வது நாளிலிருந்து 60 நாட்களுக்குள்ளாக புதுப்பிக்க நாள் ஒன்றுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும். எனவே சரியான நேரத்தில் உரிமங் களை புதுப்பித்து அபராத கட்டணத்தை தவிர்க்க கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
புதுவை பிராந்தியத்தில் உள்ள அனைத்து நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளில் உணவு பாதுகாப்பு துறை ஏற்படுத்திக்கொண்ட புரிந்துணர்வின் அடிப்படையில் வியாபார உரிமம், வணிக உரிமம் பெறுவோருக்கு உணவு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே உணவு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் இல்லாமல் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளில் உரிமம் விண்ணப்பித்தல், புதுப்பித்தல் செய்ய இயலாது.
உணவு உரிமம், பதிவு சான்றிதழ் பெற 4ம்தேதி (நாளை) கடைசிநாள் என்பதால் கூட்ட நெரிசலை தவிர்க்க ஷ்ஷ்ஷ்.யீssணீவீ.ரீஷீஸ்.வீஸீஎன்ற வலைதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக விளக்கம் பெற புதுவை கோரிமேடு இந்திராநகரில் உள்ள உணவு பாதுகாப்பு துறையை அணுகலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment