மன்னார்குடி, ஜன. 21:
மன்னார்குடியில் பெட்டிக்கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மன்னார்குடி நகராட்சி பகுதிகளில் பெட்டிக்கடைகள் மற்றும் குளிர்பான விற்பனை நிலையங்களில் காலவதியான வாட்டர் பாக்கெட்டுகள், குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. அதை கண்டறிந்து பறி முதல் செய்யுமாறு நகராட்சி தலைவர் சுதாஅன்புச்செல்வன் ஆலோ சனை வழங்கினார். அதனை தொடர்ந்து நகரா ட்சி ஆணையர் (பொ) மனோகரன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் ராஜேந்திரன், சாமிநாதன், விஜயகுமார் மற்றும் நகரா ட்சி ஊழியர்கள் பந்தலடி, மேலராஜவீதி, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெட்டி கடை களில் சோதனையிட்டனர். இதில் காலாவதியான குளிர்பானங்கள், வாட்டர் பாட்டில்கள், பாக்கெட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பாட்டில்களை நகராட்சித்தலைவர் சுதாஅன்புச்செல்வன், ஒப்பந்ததாரர்கள் பி.ஜி.பாரதி, மோகன் மற்றும் நகராட்சி ஊழியர் கள் முன்னிலையில் நகரா ட்சி வளாகத்தில் வைத்து அழிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 10 ஆயிரம்.
காலாவதியான பொருட்களை விற்பனை செய்வது சட்டப்படி குற்றம். எனவே தங்களது வாடிக்கையாளர்களுக்கு தரமான பொருட்களை விற்பனை செய்யவேண்டியது வர்த்தகர்களின் கடமை. நகராட்சி சார்பில் தொடர்ந்து கண்காணிப்புசெய்யப்படும் என ஆணையர் மனோகரன் எச்சரிக்கை விடுத்தார்.
No comments:
Post a Comment