ஓமலூர் : ஓமலூர் அருகே, கெமிக்கல் பயன்படுத்தி, தரமற்ற வெல்லம் தயார் செய்த இரண்டு கரும்பு ஆலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
ஓமலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில், அதிகளவில் கெமிக்கல் கலந்து வெல்லம் தயாரிப்பதாக உணவு கட்டுப்பட்டு அதிகாரிகளுக்கு புகார் சென்றது. அதையடுத்து, சேலம் மாவட்ட உணவு கட்டுப்பாட்டு நியமன அலுவலர் அனுராதா மற்றும் அதிகாரிகள், ஓமலூர், காமலாபுரம், ஒட்டத்தெரு ஆகிய பகுதிகளில் இயங்கும் ஆலையில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.அப்போது, தும்பிபாடி ராஜா மற்றும் மணி ஆகியோருக்கு சொந்தமான ஆலையில் அதிகளவில் கெமிக்கல் கலப்படம் செய்தும், தரமற்ற சர்க்கரையை பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது.அதையடுத்து, இரு ஆலையிலும் பதுக்கி வைத்திருந்த, 50 மூட்டை வெல்லத்தை பரிமுதல் செய்த ஆதிகாரிகள், இரு ஆலைகளுக்கும் சீல் வைத்தனர். இந்த ஆய்வின் போது, ஓமலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோன்மணி உடனிருந்தார்.
No comments:
Post a Comment