ஆத்தூர், டிச.14:
ஆத்தூரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வின் போது, குடோனில் வைக்கப்பட்டிருந்த காலாவதியான குடிநீர் கேன்கள் மற்றும் தண்ணீர் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.
சேலம் மாவட்டம் ஆத்தூர் நகரப்பகுதியில் உள்ள உணவு விடுதிகள், ஹோட்டல்கள், டீக்கடை, கேன், பாக்கெட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தண்ணீர் விற்பனையாளர்களின் குடோன்கள், மிக்சர் தயாரிப்பு நிறுவனங்கள் ஆகியவற்றில் நேற்று மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் அனுராதா தலை மையில் உணவு பாதுகாப்பு ஆய்வாளர்கள் சுந்தரராஜன், கோவிந்தராஜன், புஷ்பராஜ், முனு சாமி, சிங்காரவேல் ஆகியோர் கொண்ட குழு வினர் திடீர் ஆய்வு செய்த னர். இந்த ஆய்வின் போது, பழைய பஸ் ஸ்டாண்டின் உட்பகுதியில் ராஜேந்திரன் என்பவரது குடோனில் வைக்கப்பட்டு இருந்த காலாவதியான 124 குடிநீர் கேன் மற்றும் 50 தண்ணீர் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும் நல்லமுறையில் குடிநீர் கேன் மற்றும் மூட்டைகளை பராமரிக்கும் வகையில் குடோன்களில் இருப்பு வைக்க வேண்டும். காலாவதியான குடிநீர் கேன்கள் மற்றும் பாக்கெட் களை இருப்பு வைக்காமல் அழித்து விட வேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு அலு வலர் எச்சரிக்கை செய்தார்.
இதே போல், ஸ்வீட் ஸ்டால் ஒன்றில் வைக்கப்பட்டு இருந்த காலாவதியான குளிர்பான பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. பஸ் ஸ்டாண்ட், ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பலசரக்கு மொத்த விற்பனைக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகை யிலை, குட்கா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்யப்பட்டது. உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களின் இந்த திடீர் ஆய்வு ஆத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment