நாமக்கல், டிச.15:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே, பிலிக்கல்பாளையத்தில் வேளாண் விற்பனை, வேளாண் வணிகம், உணவுப் பாதுகாப்பு துறை மூலம் இயற்கையான முறையில் கலப்படமில்லாமல் வெல் லம் தயாரிப்பது குறித்து விவசாயிகள், வெல்ல உற்பத்தியாளர், வியாபாரிகளுக் கான விழிப்புணர்வு முகாம் நடந்தது.
இதில், உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் தமிழ்செல்வன் பேசியதாவது:
உணவு பாதுகாப்பு துறையின் மூலம். வெல்லம் மாதிரி எடுக்கப்பட்டு பகுப்பாய்வு செய்து, அனுமதிக்கப்பட்ட தர அளவுகளின்படி இல்லாவிட்டால் உற்பத்தியாளர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ரசாயனம் கலந்த வெல்லம் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படும். வெல்லம் தயாரிக்கும்போது சர்க்கரை, ரசாயனப் பொருட்களை கலக்கக் கூடாது. வெல்லக் கொட்டகையின் சுற்றுப் புறம் சுகாதாரமாகவும், கழிவுப் பொருட்கள் வெளி யேறும் வகையில் வடிகால் வசதியும் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதே போல், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) கிருஷ்ணகுமார் தலைமை வகித்து பேசுகை யில், கபிலர்மலை, பரமத்தி, மோகனூர் பகுதிகளில் கரும்பு அதிகளவில் பயிரிடப்பட்டு சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்புவதுடன் சிறு ஆலைகள் மூலம் வெல்லம் தயாரிக்கப்படுகிறது. இந்த வெல்லம் பிலிக்கல்பாளையம் வெல்லச் சந்தையில் வெளியூர் வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டு வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. நமது பகுதியில் தயாரிக்கப்படும் வெல்லம் இயற்கையைச் சார்ந்து, உணவுப் பாதுகாப்புக்கு உள்பட்டு தயாரிக்க வேண் டும் என்றார்.இதில் வேளாண் துணை இயக்குனர் பரசுராமன், உதவி இயக்குனர் தங்கராஜூ, வேளாண் அலுவலர் ராஜேஸ்வரி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment