நாமக்கல், நவ. 7:
நாமக்கல் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சுந்தரம் மற்றும் மரவள்ளி கிழங்கு பயிரிடும் விவசாயிகள், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சுந்தரத்தை சந்தித் மனு கொடுத்தனர் அதில் கூறியிருப்பதாவது:
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மரவள்ளி கிழங்கு அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. கடந்த 3 மாதத்துக்கு முன் 75 கிலோ கொண்ட ஒரு மூட்டை மரவள்ளி கிழங்கு ஆயிரமாக இருந்தது.
தற்போது, ஆலைகளில் ரசாயன கலப்படம் செய்யாமல் இயற்கையான முறையில் ஜவ்வரிசி தயாரிப்பதால் அந்த ஜவ்வரிசிகளுக்கு வடமாநிலங்களில் நல்ல வரவேற்பு உள்ளது. 90 கிலோ ஜவ்வரிசி மூட்டையின் விலை கி6,000க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாக சேலம் சேகோ சர்வ நிர்வாகத்துடன் ஏற்பட்டுள்ள பிரச்னையால், வியாபாரிகள் யாரும் ஜவ்வரிசி ஏலத்தில் பங்கேற்காமல் புறக்கணிப்பதால் ஏலம் நடைபெறவில்லை. இதனால், ஜவ்வரிசி விலை குறைந்ததுடன், மரவள்ளி கிழங்கு விலையும் வீழ்ச்சியடைந்தது. ஜவ்வரிசி ஏலம் நடைபெறாமல் உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதால் மரவள்ளி கிழங்கு அறுவடையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதே நிலை தொடர்ந்தால், சாகுபடி செய்யப்பட்டுள்ள மரவள்ளி கிழங்கு பயிரிலேயே வீணாகும் நிலை ஏற்படக்கூடும். எனவே, விவசாயிகளின் நலன் கருதி சேகோ சர்வ ஜவ்வரிசி ஏலத்தை விரைவில் நடத்த அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment