Nov 7, 2014

நெல்லையில் சோதனை குடோனில் பதுக்கிய ரூ.20 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்



நெல்லை, நவ. 7:
நெல்லை யில் குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.20 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட் களை அதிகாரிகள் பறி முதல் செய்தனர்.
தமிழகத்தில் போதை புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய அரசு தடை விதித்துள்ளது. ஆனால் அதையும் மீறி ஒருசில கடைகளில் புகை யிலை பொருட்கள் விற் பனை செய்யப்படுகின்றன. நெல்லையில் பெட்டிக்கடைகளில் கூடஅவை தாரா ளமாக விற்கப்படுகின்றன.
நெல்லை டவுனில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை குடோனில் பதுக்கி வைத்திருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. மாநகர துணை கமிஷனர் சுரேஷ்குமார் மேற்பார்வையில் உதவி கமிஷனர் கந்தசாமி, நெல்லை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவ லர் டாக்டர் கருணாகரன், உணவு அலுவலர்கள் சங்கரலிங்கம், கிருஷ்ணன் ஆகி யோர் கொண்ட குழுவினர் நயினார்குளம் மார்க்கெட் அருகே உள்ள வத்தல் குடோனில் நேற்று சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு 3 வகையான போதை புகை யிலை பாக்கெட்டுகள் சுமார் 109 பண்டல் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து டாக்டர் கருணாகரன் கூறியதாவது:
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை அரசு உத்தரவை மீறி ஒரு சில வியாபாரிகள் கடை களில் விற்கின்றனர். இவற் றில் நிகோடின் எனும் போதை பொருள் கலந்துள் ளது. இவைகளை விற்பது சட்டப்படி குற்றமாகும். தற்போது 2303 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.20 லட்சம்.
ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து புகை யிலை பொருட்களை இங்கு கொண்டு வந்து குடோனில் பதுக்கி கடைகளுக்கு சப்ளை செய்கின்றனர். இதுதொடர்பாக குடோன் உரிமையாளர், விற்பனையாளர் மற்றும் தயாரிப்பாளர் மீது வழக்குபதிவு செய்யப்படும். மேலும் இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் மற்றும் உணவு பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட் கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து முடிவு வந்ததும் அழிக்கப்படும். ஏற்கனவே இதேபோல் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment