கரூர், அக்.9:
தடை செய்யப்பட்ட பான்பராக் குட்கா விற்பனை செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள எதிர்பார்க்கின்றனர்.
பான்மசாலா, குட்கா போன்ற பொருட்கள் விற்பனைக்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளது. பொதுமக்களின் நலன்கருதி, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் சட்டத்தின்கீழ் புகையிலை மற்றும் நிகோடின் கலந்த பொருட்கள் விற்பனை செய்ய கரூர் மாவட்டத்தில் கடந்த மே மாதம் முதல் தடை விதிக்கப்பட்டது.
நிகோடின் கலந்த பொருட்களை மக்கள் உட்கொள்வதால் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டு இளம்வயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விடுவதற்கு வாய்ப்புள்ளது. மேலும் வாயின்உட்பகுதி உதட்டுபாகம், தாடை, நாக்கு, தோல் புற்றுநோய் ஏற்பட்டு மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே நிகோடின், புகையிலை கலந்து தயாரிக்கப்படும் பான்மசாலா குட்கா, மாணிக்சந்த், பான்பராக், ஹான்ஸ், மாவா, தம்மக், கணேஷ், பாஸ்பாஸ் மற்றும் பீடா போன்றவற்றின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தடையை மீறி இந்த பொருட்கள் மீண்டும் விற்பனை செய்யப்படுகிறது. வாகன ஓட்டிகள், பயணிகள் என பொது இடங்களில் இவற்றை பயன்படுத்தி வருகின்றனர். எனவே பான்பராக் குட்கா போன்ற பொருட்களை விற்பனை செய்வதை தடுக்க வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
No comments:
Post a Comment