கடலூர், ஜூலை 30:
கடலூர் செம்மண்டலம் பகுதி இறைச்சி கடைகளை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் ராஜா நேற்று திடீர் ஆய்வு செய்தார். உணவு பாது காப்பு அலுவலர் ரவிச்சந்திரன் உடன் இருந்தார். இறைச்சி கடைகளை ஆய்வு செய்து விதிமுறைகள் மீறப்பட்ட சில கடைகளின் உரிமையாளர்களுக்கு டாக்டர் ராஜா எச்சரிக்கை விடுத்தார். அப்போது அவர் கூறியதாவது:
பொது மக்கள் கூடும் இடங்களில் இறைச்சி கடைகள் இருக்கக்கூடாது. 50 மீட்டர் தள்ளியே அமைந்திருக்க வேண்டும். அதை போல் வழிபாட்டு தலங்களில் இருந்து 100 மீட்டர் தூரம் தள்ளியிருக்க வேண்டும்.
அனைவரின் பார்வையிலும் ஆடுகளை அறுக்கக்கூடாது. எலும்புகள் மற்றும் கழிவுகள், தோல்கள் ஆகியவற்றை உடனுக்குடன் அப்புறப்படுத்திவிட வேண்டும். துருப்பிடித்த கத்திகளை பயன்படுத்தக்கூடாது. இடம் சுகாதாரமாக இருக்க வேண்டும். இறைச்சியை கழுவ பயன்படுத்தப்படும் தண்ணீர் சுத்தமானதாக இருக்க வேண்டும். வெட்டப்படும் ஆடுகள் சுகாதாரமானவை என சான்றிதழ் பெற வேண்டும். இந்த விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றால் முதற்கட்டமாக நோட்டீஸ் அளிக்கப்படும். மீண்டும் அந்த தவறை தொடர்ந்தால் லைசென்ஸ் கேன்சல் செய்யப்பட்டு கடை மூடப்படும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment