Jun 26, 2014

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் ஓட்டல், கடைகளில் காலாவதி பொருட்கள் பறிமுதல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி


வேலூர், ஜூன் 26:
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள ஓட்டல் மற்றும் கடைகளில் வைத்திருந்த காலாவதியான பொருட் களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்து அழித்தனர்.
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட புதிய மற்றும் பழைய பஸ் நிலையம், காட்பாடி ரயில் நிலையம், ஆற்காடு சாலையில் உள்ள ஓட்டல், கடைகளில் காலாவதியான, தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மணிமாறனுக்கு புகார்கள் வந்தது.
அதன்பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொளஞ்சி, சுரேஷ் தலைமையிலான 10க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் நேற்று பகல் 12 மணியளவில் வேலூர் புதிய பஸ்நிலையத்தில் அதிரடி ரெய்டு நடத்தினர்.
அப்போது பெட்டிக் கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பான்பராக் போதை பொருட் களை பறிமுதல் செய்தனர். ஓட்டல்களில் நடந்த ரெய்டில் காலாவதியான இட்லி மாவு, ஐஎஸ்ஐ முத்திரையில்லாத வாட்டர் பாக்கெட்டுகள், நேற்று முன்தினம் சமைக்கப்பட்ட பரோட்டா, 5 கிலோ சிக்கன் ஆகியவற்றை கைப்பற்றினர்.
அதேபோல் கடைகளில் லேபிள்கள் இல்லாத முறுக்கு, மிக்சர், சிப்ஸ் பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் அங்குள்ள ஒரு கடையில் ஆரஞ்சு ஜூஸ் தயார் செய்து கொண்டிருந்தனர். அவை சுகாதாரமற்ற முறையில் இருந்ததால் அவற்றையும் பறிமுதல் செய்து அழித்தனர்.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கூறுகையில், ‘மாநகர பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் ஓட்டல்களில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்வதாக புகார்கள் வந்துள்ளது என்றார்

No comments:

Post a Comment