கடலூர், ஜூன் 21:
கடலூர் அருகே ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான, புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கடலூர் திருப்பாதிரிப் புலியூர் மற்றும் புதுப் பாளையம் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இளைஞர்கள், மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கு பல்வேறு புகார்கள் சென்றது. கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி டாக்டர் ராஜா தலைமையில் கடலூர் அலுவலர் நந்தகுமார், குறிஞ்சிப்பாடி சுப்ரமணியன் ஆகியோர் திருப்பாதிரிப்புலியூர் மற்றும் புதுப்பாளையம் பகுதிகளில் உள்ள கடைகளில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் ரூ 50 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பொருட்களை விற்பனை செய்த கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. இது போல் காலாவதியான ரஸ்னா, மோர் உள்ளிட்ட குளிர்பானங்களையும் தின்பண்டங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.
No comments:
Post a Comment