ஓசூர், ஜூன் 21:
ஓசூரில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பல்வேறு இடங்களில் நடத்திய சோதனையில், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த
1.5 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஓசூர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என கண்காணிக்க கலெக்டர் ராஜேஷ் உத்தரவிட்டார். இதன்பேரில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் கலைவாணி தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சேகர், குணசேகர், லிங்கவேல், துளசிராமன், ராஜசேகர், சாமிநாதன், மற்றும் நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் ஓசூர் நகரில் கடைகளில் சோதனை செய்தனர்.
ஓசூர் நஞ்சுண்டேஸ்வரர் கோயில் சாலை, ராயக்கோட்டை சாலை, பாகலூர் சாலை, தாலுகா அலுவலக சாலை என பல இடங்களில் 6 குழுக்களாக பிரிந்து சோதனை செய்தனர். இதில், பல கடைகளில், தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா, பான்பராக், ஹான்ஸ் ஆகியவை விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவற்றை அதிகாரிகள் மூட்டை, மூட்டையாக பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு
1.5 லட்சமாகும். பின்னர் அவற்றை ஓசூர் அலசநத்தம் ஏரி அருகில் கொட்டி தீயிட்டு அழித்தனர்.
No comments:
Post a Comment