திருச்சி, ஜூன் 4:
காந்தி மார்க்கெட்டில் நேற்று நடத்திய அதிரடி சோதனையில், கார்பைட் மூலம் பழுக்கவைக்கப்பட்ட 5,000 கிலோ மாம்பழங்கள் அரியமங்கலத்தில் உள்ள குப்பை கிடங்கில் அழிக்கப்பட்டது.
மே மாதம் மாம்பழ சீசன் தொடங்கியதை யொட்டி திருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு சேலம், கிருஷ்ணகிரி, சேந்தமங்கலம், நத்தம், துவரங்குறிச்சி, மேலுர்,கள்ளிப்பட்டி ஆகிய ஊர்களில் இருந்து மாம்பழம் ரகங்களான கல்லாமணி, மல்கோவா, அல்போன்சா, செந்துரம், பங்கனபள்ளி, இமாம் பசந்து உள்ளிட்ட மாம்பழங்கள் வரத்து அதிகரித்துள்ளது. தஞ்சை, கும்பகோணம், மயிலாடு துறை உள்ளிட்ட பகுதிகளுக்கு தேவையான பாம்பழங்கள் காந்தி மார்க்கெட்டில் இருந்து அனுப்பப்படுகிறது.
திருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு லாரிகளில் வரும் மாம்பழங்களை திருச்சி மற்றும் சுற்று வட்டாரங்களை சேர்ந்த சிறு வியாபாரிகள் வந்து ஏலம் எடுத்து செல்கின்றனர். இந்த வருடம் விளைச்சல் மற்றும் வரத்து குறைவால் மாங்காய்களை இயற்கை யாக பழுக்க வைக்க காலதாமதம் ஆவதால் செயற்கை முறையில் பழுக்க வைக்க சில வியா பாரிகள் குறுக்கு வழியை கையாண்டு வருகின்றனர்.
திருச்சி காந்தி மார்க்கெட்டில் மாம்பழங் களை கார்பைட் கல் மூலம் பழுக்க வைத்து சில்லறை கடைகளுக்கு விற்பனை செய்வதாக நேற்று வந்த ரகசிய தகவலின் பேரில் மாநகராட்சி சுகாதார நல அலுவலர் டாக்டர் மாரியப்பன் தலைமையி லான சுகாதார ஆய்வாளர் பரசுராமன், மேற்பார்வையாளர் கள், சுகாதார அலுவலர்கள் 5 பேர் கொண்ட குழுவினர் காந்திமார்க்கெட்டில் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இதில் 13 மாம்பழ குடோன்களில் சோதனை நடத்தியதில், 2 குடோன் களில் மாம்பழ குவியல்க ளுக்கு இடையே கார்பைட் கல் பொட்டலங்களை போட்டு அவற்றை வெப்ப மூட்டி பழுக்க வைத்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள நெல்பேட்டை லெஸ்கர் தெருவில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.
இதில் அந்த வீட்டில் மாம்பழ குடோன் அமைத்து கார்பைட் கல் மூலம் மாம்பழங்களை பழுக்க வைத்து விற்ப னைக்காக அனுப்பியது தெரிய வந்தது. இதில் மொத்தம் 3 குடோன்களில் கைப்பற்றப்பட்ட 5,000 கிலோ மாம்பழங்கள் லாரிகள் மூலம் ஏற்றி அரியமங்கலத்தில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டது.
திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள மாம்பழக்கடைகளில் மாநகராட்சி நகர் நல அலுவலர் தலைமை யிலான 5 பேர் கொண்ட குழுவினர் நடத்திய அதிரடி சோதனை யால் வியாபாரிகள் இடையே நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
காற்றில் பறக்கும் உத்தரவு
ஏப்ரல் மாதம் மாம்பழ சீசன் தொடங்கி ஒரு மாதத்திற்கு பின் மே1ம் தேதி உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத்துறை துறை சார்பில் அதிகாரி ராமகிருஷ்ணன் தலைமையிலான 10 பேர் கொ ண்ட குழுவினர் காந்திமார்க் கெட்டிலும், மே 21ம்தேதி கலெக்டர் ஜெயஸ்ரீ தலைமையில் கொண்ட குழுவினர் ஸ்ரீரங்கம் மாம்பழசாலை காவிரி கரையோரத்திலும் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கார்பைட் கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை பறிமுதல் செய்ததோடு, தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்பட உள்ளதால் வியாபாரிகள் கார் பைட் பயன்படுத்தக்கூடாது. மீறி பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனாலும் வியாபாரிகள் சிலர் இதை காதில் வாங்கிக்கொள்ளாமல் கார்பைட் கல் பயன்படுத்துகின்றனர்.
இதுவரை 10ஆயிரம் கிலோ பறிமுதல்...
ஏப்ரல், மே, ஜுன் மாதங்களில் மாம்பழ சீசன் தொடர்ந்து இருக்கும். இந்த வருடம் விளைச்சல் மற்றும் வரத்து குறைவால் மாங்காய்களை இயற்கையாக பழுக்க வைக்க காலதாமதம் ஆவதால் செயற்கை முறையில் பழுக்க வைக்க சில வியாபாரிகள் குறுக்கு வழியில் ஈடுபட்டு மாம்பழங்களை கார்பைடு கல் மூலம் பழுக்க வைத்து விற்பனை செய்து வந்ததாக வந்த தகவலின் பேரில் மே முதல் வாரத்தில் 2 ஆயிரம் கிலோவும், 21ம் தேதி 3ஆயிரம் கிலோவும், ஜுன் 3ம்தேதி 5ஆயிரம் கிலோவும் கார்பைடு மாம்பழங்கள் என இதுவரையிலும் மொத்தம் 10ஆயிரம் கிலோ கார்பைடு மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட மாம்பழங்களை குப்பை கிடங்கில் உடனடியாக அழிக்கப் பட்டன.
வழக்கு பதிவு?
மாநகராட்சி சுகாதார நல அலுவலர் மாரியப்பன் கூறுகையில், கார்பைட்கல் மூலம் பழுக்க வைக்கும் மாம்பழங்களை சாப்பி டுவதால் உடல் நலம் பாதிக்கப்படும். எச்ச ரிக்கையை மீறி கார் பைடு மாம்பழங்கள் வியாபாரிகள் விற்று வருகின்றனர். இதில் 2 குடோன்களில் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஒரு குடோனும் கண்டு பிடிக்கப் பட்டது. சம்பந்தப்பட்ட வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கலெக்டரிடம் ஆலோசனைக்கு பின் அவர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு அல்லது இந்திய தண்டனை சட்டம் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது என்றார்.
No comments:
Post a Comment