சேலம்.மே 22
சேலம் மாநகரில் உள்ள பழக்கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் அனுராதா தலைமையில் சின்னக்கடை வீதி, பெரியகடைவீதி, தேர்நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பழ குடோன்களை திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது குடோன் உரிமையாளர்களிடம் மாம்பழங்களை எந்த முறையில் பழுக்க வைக்கப்படுகிறது என்று கேட்டறிந்தார். கடந்த ஆண்டு நடத்திய சோதனையில் கடைவீதியில் உள்ள மாம்பழ குடோன்களில் கார்பைட் கல்மூலம் பழங்கள் பழுக்கவைக்கப்பட்டிருந்ததை கண்டு பிடிக்கப்பட்டு அவைகள் அழிக்கப்பட்டன. இந்த ஆண்டு கார்பைடு கல் மூலம் யாரும் பழங்களை பழுக்க வைக்கவில்லை.
இதையடுத்து குடோன் உரிமையாளர்களிடத்தில் கார்பைடு கல் மூலம் பழங்களை பழுக்க வைப்பதற்கு பதிலாக எத்தரால் என்ற கெமிக்கலை பழங்கள்மீது ஸ்பிரே செய்தால் ஒரேமாதிரியாக பழுக்கும் என்றார். இந்த முறைக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் பழங்கள் கெடாமலும், யாருக்கும் பாதிப்பு ஏற்படாது என்று குடோன் உரிமையாளர்களிடம் ஆலோசனை வழங்கினார். ஆய்வின் போது உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் உடன் சென்றிருந்தனர்.சேலத்தில் மாம்பழ குடோன்களில் உணவு பாதுகாப்பு அதிகாரி இன்று திடீர் ஆய்வு நடத்தியதால் வியாபாரிகளிடத்தில் பரபரப்பு காணப்பட்டது.
No comments:
Post a Comment