Mar 9, 2014

உணவுப் பாதுகாப்பு அலுவலர்களுக்கு நடத்தை விதிகளை அறிவிக்கக் கோரிக்கை

நடத்தை விதிமுறைகளை விரைவில் அறிவிக்க வேண்டும் என உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் சங்க மாநில செயற்குழுக் கூட்டம், சங்கத் தலைவர் ஆ.போஸ் தலைமையில் கடலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
மாவட்டம்தோறும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுடன் அலுவலகங்களை ஏற்படுத்த வேண்டும். இன்றைய சூழலில் எல்லாமே ஆன்-லைன் என்ற முறையில் செயல்படுகிறது. எனவே, அனைத்து அலுவலர்களுக்கும் லேப்-டாப் வழங்குவதுடன், களப்பணி உதவியாளர்களை நியமிக்க வேண்டும். மத்திய அரசின் வழிகாட்டுதல்படி மாவட்ட நியமன அலுவலர் பதவியை ஏற்படுத்தவேண்டும்.
உணவுப் பாதுகாப்பு அலுவலர்களுக்கான நடத்தை விதிமுறைகளை விரைந்து முடித்திட வேண்டும்.
மாநில பொதுச்செயலர் ஈ.கோவிந்தசாமி, பொருளாளர் டி.ரவிச்சந்திரன், மண்டல ஒருங்கிணைப்பாளர் சி.ரவிக்குமார், மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் எம்.பி.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சங்க கூட்டம் 
கடலூர், மார்ச் 9: 
கடலூரில், தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. 
மாநில தலைவர் போஸ் தலைமை தாங்கினார். மண்டல ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார் வரவேற்றார். மாநில பொது செயலாளர் கோவிந்தசாமி வேலை அறிக்கை வாசித்தார். மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் ராஜா, வங்கி ஊழியர் சங்கம் மருதவாணன், சத்துணவு ஊழியர் சங்கம் ரங்கசாமி, தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் பச்சையப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். உணவு பாதுகாப்புத்துறை புதியதாக துவங்கப்பட்டு 2.5 ஆண்டுகள் கடந்த நிலையில் புதிய மேம்படுத்தப்பட்ட ஊதிய முறைகளை ஊழியர்களுக்கு வழங்கிட வேண்டும். உணவு பாதுகாப்பு துறையில் பணிபுரியும் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு மடிக்கணினி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


No comments:

Post a Comment