Mar 27, 2014

சவுகார்பேட்டையில் இரண்டரை டன் குட்கா பொருள் பறிமுதல்

சென்னை, மார்ச் 27: 
சென்னை முழுவதும் அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் கடைகளில் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து, சவுகார்பேட்டை பந்தர் தெருவில் நேற்று முன்தினம் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் செபராஜ், சுந்தரேசன், இளங்கோ ஆகியோர் தலைமையில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, அங்கிருந்த குடோனில் அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், ஹான்ஸ், புகையிலை உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் அங்குள்ள கடைகளில் சோதனை நடத்தியதில் மேலும் சில புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 
தொடர்ந்து இரு தினங்களாக நடத்திய சோதனையில் 2,500 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்துக்கு கொண்டு சென்று, ராட்சத குழிகள் தோண்டி புதைக்கப்பட்டன.

No comments:

Post a Comment