Feb 12, 2014

குளிர்பான குடோனுக்கு சீல்


வடலூர்: வடலூரில் குளிர்பான குடோனுக்கு மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர். நெய்வேலி அடுத்த சேப்ளாநத்தம் காலனியைச் சேர்ந்தவர் அஞ்சாபுலி, இவர் கடந்த 9ம் தேதி அதை பகுதியில் உள்ள கடையில் பெப்சி குளிர்பானம் வாங்கினார். அதனை, அவரது மகள்கள் லலிதா (10), அபிராமி (8), கவுசல்யா (3), மகன் பரமசிவம் (3) ஆகியோர் குடித்தனர். உடன் நால்வரும் மயங்கி விழுந்தனர். கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிறுமி அபிராமி இறந்தார். அதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் குளிர்பானத்தை விற்பனை செய்த கடை, வினியோகஸ்தர் குடோனுக்கு சீல் வைத்தனர். நேற்று உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா தலைமையில் சுப்ரமணியன், நல்லதம்பி, ஏழுமலை, கொளஞ்சியன், நந்தகுமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று வடலூர் பகுதியில் உள்ள கடைகள், குளிர்பான கடைகளில் ஆய்வு நடத்தி காலாவதியான உணவு பொருட்கள், குளிர்பானங்களை அழித்தனர். வடலூர் சிப்காட் பகுதியில் இயங்கி வந்த பெப்சி குடோனில் சோதனை நடத்தினர். இதில் காலாவதியான 2,000க்கும் மேற்பட்ட பெப்சி, மிராண்டா குளிர்பான பாட்டில்களை அழித்தனர். பின்னர், குடோனுக்கு சீல் வைத்தனர்.
வடலூர் சிட்கோ வளாகத்தில் உள்ள தனியார் ஏஜென்சியின் குடோனில், மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் ராஜா தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அடுத்த படம்: காலாவதியான குளிர்பானங்களை வைத்திருந்த குடோனுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment