வடலூர், பிப். 12:
வடலூரில் காலாவதியான 2 ஆயிரம் குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, குடோனுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
வடலூர் அடுத்த சேப்ளாநத்தம் கிராமத்தில் காலாவதியான குளிர்பானம் குடித்த சிறுமி பலியானார். இந்த சம்பவத்தையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று மாலை வடலூர் சிட்கோ வளாகத்தில் உள்ள தனியார் ஏஜென்சியின் குடோனில் மாவட்ட உணவு பாது காப்பு அதிகாரி டாக்டர் ராஜா தலைமையில், வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் வடலூர் சுப்பிரமணியம், விருத்தாசலம் நல்லதம்பி, கம்மாபுரம் ஏழுமலை, காட்டுமன்னார்கோவில் கொளஞ்சி யான் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலாவதியான குளிர்பானங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காலாவதியான குளிர்பானங்களை பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட குடோ னுக்கு சீல் வைக்கப்பட்டது.
மேலும் இதுகுறித்து சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாவட்டம் முழுவதும் உள்ள குடோன்களில் ஆய்வு நடத்தப்படும் என்றும் டாக்டர் ராஜா தெரிவித்தார்.
No comments:
Post a Comment