திண்டுக்கல், ஜன. 11:
மத் திய அரசின் உணவு பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டத்தால் உணவுத் தொழில் பாதிக்கப்படும். அதனால், இந்த சட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப் படுத்த கூடாது என்று மாவட்ட தெழில் வர்த்தகர் சங்கத்தினர் தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து மாவட்டத் தலைவர் கிருபாகரன் தமிழக முதலமைச்சருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது: “மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், விதிகள், ஒழுங்குமுறை களை உணவுத் தொழில் புரிவோர் கடைபிடிக்க முடியாது. உணவுத் தொழில் ஒட்டு மொத்தமாக அழியும் சூழ்நிலை உருவாகும். எனவே இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது. பதிவு மற்றும் உரிமம் எடுக்க 2015 பிப்.4ம் தேதி வரை கால நீட்டிப்பு அளிக்க வேண்டும். இந்த கோரிக்கை மத்திய சுகாதார அமைச்சர் குலாம்நபி ஆசாத்திடம் வழங்கப்பட்டு தற்போது பரிசீலனையில் இருக்கிறது. அதனால், மாநில அரசும் கட்டாயப் படுத்தக் கூடாது.
மேலும், சில்லரை வணிகத்தில் அந்நிய நிறுவனங்களை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது என்று அனைத்து வணிகர்களும் போராடி வரும் நிலையில், இங்கிலாந்தைச் சேர்ந்த டெஸ்கோ நிறுவ னம் டாடா நிறுவனத்து டன் கூட்டு சேர்ந்து சில்ல ரை கடைகளை திறக்க மத்திய அரசு அனுமதி வழ ங்கி உள்ளது. தமிழகத்தில் டெஸ்கோ நிறுவன கடைகளைத்திறக்க தமிழக முதல் வர் அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment