ஊட்டி, ஜன. 11:
உணவு பொருள் கலப்படம் குறித்த விழிப்புணர்வு முகாம் இன்று ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் நடக்கிறது.
நீலகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு அலுவலர் டாக்டர் ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உணவுப் பொருள் கலப்படம் மற்றும் அதனை தடுப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் ஊட்டியில் உள்ள அரசுக் கலைக்கல்லூரியில் 11ம தேதி (இன்று) நடக்கிறது. இதில், உணவு பொருட்களில் கலப்படம் எவ்வாறு செய்யப்படுகிறது.
அதனை கண்டறியும் முறைகள் மற்றும் தடுக்கும் முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும். தொடர்ந்து தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா போட்டிகளும் நடக்கும். பேச்சு, கட்டுரை, கவிதை, ஓவியப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
இப்போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்படும். இப்போட்டிகள் தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ள அரசு கலைக்கல்லூரி தாவரவியல் பேராசிரியர் டாக்டர் ரவியை தொடர்பு கொண்டு தெரிவித்துக் கொள்ளலாம். இவ்வாறு தரகட்டுப்பாட்டு அலுவலர் ரவி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment