சென்னை, ஜன. 11:
எம்கேபி நகர் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். எம்கேபி நகர் வடக்கு அவன்யூவில் சென்றபோது, சாலையில் 10 மூட்டைகள் கேட்பாரற்று கிடந்தன. இதை பார்த்து சந்தேகமடைந்த போலீசார், அந்த மூட்டைகளை பிரித்து பார்த்தனர். அதில், ஹன்ஸ், குட்கா, பான்பராக் உள்ளிட்ட குட்கா பொருட்கள் இருந்தது தெரிந்தது. அவற்றின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதையடுத்து 10 மூட்டைகளையும் போலீசார் கைப்பற்றி காவல் நிலையம் கொண்டு வந்தனர்.
பின்னர், உணவு பொருள் பாதுகாப்பு துறை அதிகாரி லட்சுமி நாராயணாவிடம், கைப்பற்றப்பட்ட குட்கா பொருட்களை ஒப்படைத்தனர். நேற்று அவற்றை கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் கொட்டி, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அழித்தனர். குட்கா பொருட்களை கடத்தி வந்து, சாலையில் போட்டு சென்றது யார் என போலீசார் விசாரிக்கின்றனர்.
No comments:
Post a Comment