பவானி, ஜன. 25:
பவானி, ஜம்பை பகுதிகளில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.11 ஆயிரம் மதிப்பிலான தரமற்ற உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோபி சப்&கலெக்டர் சந்திரசேகர சாகமுரி உத்தரவின் பேரில் மாவட்ட நியமன அலுவலர் கருணாநிதி தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பத்மநாபன், சதீஸ்குமார், ஸ்ரீனிவாஸ் கொண்ட குழுவினர் பவானி நகரில் சாலையோர உணவு விடுதிகளில் சோதனை நடத்தினர். சாலையோர ஓட்டல்கள், பஞ்சாபி உணவு விடுதிகளில் ரோட்டில் இருந்து வரும் புழுதி, உணவுப் பொருள்கள் மீது படியாமல் தடுக்க மறைப்பு கட்ட வேண்டும், உணவுப் பொருட்களைப் பாலிதீன் கவரில் அடைத்து விற்பனை செய்யக் கூடாது, பாதுகாப்பான குடிநீரை குழாயுடன் கூடிய பாத்திரத்தில் வழங்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.
உணவு விடுதியில் முறையாக பராமரிக்கப்படாமல் வைக்கப்பட்டிருந்த கோழி இறைச்சி, தயாரிப்பு தேதி இல்லாமல் வைக்கப்பட்டிருந்த காளான் பாக்கெட்டுகள் கைப்பற்றி அழிக்கப்பட்டன. மேலும், பாலிதீன் பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட் களையும் அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர். அவற்றின் மதிப்பு ரூ.11 ஆயிரம்
raid மூலமாக விழிப்புணர்வு
ReplyDelete