Jan 26, 2014

மணமேல்குடியில் காலாவதியான உணவுப்பொருட்கள் பறிமுதல்

ணமேல்குடி, ஜன.25: 
மணமேல்குடி கடை வீதியில் உணவுப் பாதுகாப்பு அலுவலர் வேல்முருகன் தலைமையில் அதிகாரிகள் மளிகைக்கடை, டீக்கடை, குளிர்பானக்கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 
ஆய்வில் காலாவதியான குளிர்பானங்கள், பிளாஸ்டிக் பைகள் பறிமு தல் செய்யப்பட்டு, ஊரட்சி குப்பைக்கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டது. மேலும் கடைகளின் உரிமையாளர்களிடம் காலாவதியான பொருட்கள் விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. 
மேலும் உணவு தொழில் புரியும் அனைத்து வணிகர்களும் வருகிற பிப்ரவரி 4ம் தேதிக்குள் உணவு பாதுகாப்பு உரிமம் பெற வேண்டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 comment:

  1. சரியான நடவடிக்கை சட்ட பூர்வமாக எடுக்க வேண்டும்...

    ReplyDelete