மணப்பாறை, ஜன.10:
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள ஆவிகாரப்பட்டியில் முறையான அனுமதியின்றி செயல்பட்டு வந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கம்பெனியை அரசு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மணப்பாறை மதுரை ரோட்டை சேர்ந்தவர் தங்கவேல் (45). ஆவிகாரப்பட்டியில் உள்ள இவருக்கு சொந்தமான தோட்டத்தில் குடிநீர் கம்பெனி அமைத்து முறையான அரசு அனுமதி பெறாமல் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயார் செய்து விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்து திருச்சி மாவட்ட அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் முற்றுகையிட்டு போலீசார் மற்றும் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை (உணவுபிரிவு) அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி மாவட்ட நியமன அலுவலர் ராமகிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள் பிரசாத், சண்முகசுந்தரம் மற்றும் அழகுபாண்டி, மணப்பாறை எஸ்எஸ்ஐ அண்ணாதுரை ஆகியோர் முறையான அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்த கம்பெனிக்கு சீல் வைத்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment