அம்பை வட்டார பகுதியில்
வி.கே. புரம், டிச. 13:
அம்பை வட்டார பகுதியான அடையக்கருங்குளம், சிவந்திபுரம், ஆறுமுகம்பட்டி, வராகபுரம் பகுதிகளில் கலப்பட பால் விற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அம்பை வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரி நாகசுப்பிரமணி யன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: அம்பை வட் டார பகுதிகளில் கலப்பட பால், எண்ணெய், மற்றும் தேயிலை விற்பனை செய்வதாக வந்த புகாரின் அடிப்படையில் கலெக்டர் மற்றும் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலு வலர் டாக்டர் ஜெகதீஸ் ஆலோசனையின் பேரில் சிவந்திபுரம், அடையக்கருங்குளம், ஆறுமுகம்பட்டி, வராகபுரம் பகுதிகளில் விற்கப்பட்ட பால், சோதனைக்காக எடுக்கப்பட்டு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆய்வில் பாலில் அதிக அளவு தண்ணீர் சேர்க்கப்பட்டது தெரியவந்தது.
இவர்கள் மீது வழக்கு தொடரப்படும். மேலும் பால், இறைச்சி, குடிநீர், கலர், சோடா உள்ளிட்ட குளிர்பானங்கள், அரிசி, மாவு ஆலை, பலசரக்கு விற்பனையாளர், ஏஜன்டுகள், உணவு தொழில் செய்பவர்கள் அனைவரும் 2014 பிப்ரவரி 4ம் தேதிக்குள் பதிவு அல்லது உரிமை சான்றிதழ் பெற வேண்டும். இச்சான்றிதழ்கள் பல்வேறு ஆய்வுக்குப் பின் வழங்கப்படும் என்பதால் 60 நாடகளுக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும். மேலும் ஏற் கனவே உரிமை சான்றிதழ் பெற்றவர்கள், அதனை புதுப்பித்து கொள்ள வேண் டும். கலப்படமான, காலாவதியான மற்றும் கெட்டுப் போன பொருட்களை விற்பனை செய்தாலோ, ஸ்டாக் வைத்திருப்பதோ தெரியவந்தால் அம்பை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலருக்கோ (9443582884) மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிக்கோ (9443151996) தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment