சேலம், டிச.13:
சேலம் 5 ரோடு, சூரமங்கலம் உள்ளிட்ட பகுதியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 83 ஆயிரம் மதிப்பிலான பான்பராக், குட்காவை பறிமுதல் செய்தனர்.
சேலம் 5 ரோடு, சூரமங்கலம், ராம்நகரில் உள்ள பெட்டிக்கடை, டீக்கடை, மளிகை கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் அனுராதாவுக்கு தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின் பேரில், சூரமங்கலம் உணவு பாதுகாப்பு அலுவலர் திருமூர்த்தி, பாலு ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள மளிகை கடை, டீக்கடை, பெட்டிக்கடையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் 83 ஆயிரம் மதிப்பிலான பான்பராக், குட்கா, புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அரசால் தடை செய்யப்பட்ட இது போன்ற பொருட்களை விற்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடை உரிமையாளர்களை எச்சரித்த அதிகாரிகள், நோட்டீஸ் வழங்கினர்.

No comments:
Post a Comment