புதுடெல்லி, அக்.23-குளிர்பானங்களில்
சேர்க்கப்படுகிற ரசாயனங்களை கண்காணிப்பதுடன், குறித்த காலங்களில் அவற்றை
சோதிக்கவும் வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு
பிறப்பித்தது.பொது நல வழக்குசுப்ரீம்கோர்ட்டில் கடந்த
2004-ம் ஆண்டு ‘சி.பி.ஐ.எல்.’ என்று அழைக்கப்படுகிற பொது நல வழக்கு மையம்,
ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்தது. அந்த வழக்கில் கூறி இருந்ததாவது:-கார்பனேட்டட்
மென்பானங்களில் (காற்றடைக்கப்பட்ட குளிர்பானங்கள்) மனித உடல் நலத்துக்கு
மிகுந்த கேடு ஏற்படுத்துகிற பொருட்கள் அடங்கி உள்ளன. இத்தகைய
குளிர்பானங்களால் ஏற்படுகிற அபாயங்களை கண்டறியவும், அளவிடவும் எந்த
நடவடிக்கையும் இல்லை. குளிர்பானங்களில் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கிற
பொருட் கள் அடங்கி இருப்பதால், பொதுமக்களைக் காக்கிற வகையில்,
குளிர்பானங்களை ஒழுங்குபடுத்துவதற்கு என்று தனியாக ஒரு குழுவை அமைக்க
உத்தரவிடவேண்டும்.விளம்பரங்கள் மேலும் குளிர்பான பாட்டில்களில்
ஒட்டப்பட்டுள்ள லேபிள்களில், அவற்றில் என்னென்ன அடங்கியுள்ளன என்பதை
குறிப்பிட உத்தரவிட வேண்டும்.
அதேபோன்று குழந்தைகளை குறிவைத்து குளிர்பான நிறுவனங்கள் வெளியிடுகிற
விளம்பரங்களை ஒழுங்குபடுத்த வேண்டும். இவ்வாறு வழக்கில்
கூறப்பட்டுள்ளது.சுப்ரீம் கோர்ட்டு விசாரணைஇந்த
வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, பெப்சி நிறுவனத்தின்
சார்பில் ஆஜரான வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். “உணவு பாதுகாப்பு
மற்றும் தர சட்டம் குளிர்பானங்களின் தரத்தை ஒழுங்குபடுத்துவதற்காகத்தான்
இயற்றப்பட்டுள்ளது. அதுவே போதுமானது. அனைத்து ஒழுங்குமுறைகளும் அதில்
குறிப்பிடப்பட்டுள்ளன” எனவும் அவர் கூறினார்.வழக்குதாரர் சார்பில்
மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆஜராகி வாதாடினார். அப்போது அவர், “ஒரு
சுயேச்சையான வல்லுனர் குழுவை நியமிப்பதற்கு பதிலாக உணவு பாதுகாப்பு மற்றும்
தர சட்ட ஆணையத்தின், லேபிள், விளம்பரங்கள் தொடர்பான வல்லுனர் குழுவே,
குளிர்பானங்களில் நீண்டகாலம் கெடாமல் இருப்பதற்காக சேர்க்கப்படுகிற
ரசாயனங்களால் ஏற்படுகிற பாதிப்புகளை பரிசீலிக்க வேண்டும்” என
வாதாடினார்.குழு அமைப்புஅதைத்
தொடர்ந்து 2011-ம் ஆண்டு பிப்ரவரி 8-ந்தேதி உணவு பாதுகாப்பு மற்றும் தர
சட்ட ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒரு உத்தரவிட்டது. அந்த உத்தரவில்,
குளிர்பானங்களில் சேர்க்கப்படுகிற ரசாயனங்களால் ஏற்படுகிற பாதிப்புகள்
குறித்து ஆராய்வதற்கு சுயேச்சையான அறிவியல் குழுவினை அமைக்கும்படி
கூறப்பட்டது.அதன்படி அறிவியல் குழு அமைக்கப்பட்டது. அந்தக்குழு
ஆராய்ந்து அறிக்கை அளித்தது. அதில், “குளிர்பானங்களில் செயற்கை இனிப்பு,
பாஸ்போரிக் அமிலம், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், கார்பன் டை ஆக்சைடு,
செயற்கை வண்ணங்கள், பென்ஜோயிக் அமிலம், காபின் ஆகியவை உணவு மற்றும் தர
நிர்ணய ஒழுங்குமுறை விதிகளில் கூறப்பட்டுள்ள அளவே சேர்க்கப்பட்டுள்ளன.
மேலும், வரையறை செய்யப்பட்டுள்ள அளவுக்குள் அவற்றை சேர்க்கிறபோது
பொதுமக்களின் உடல் நலத்துக்கு கேடு ஏற்படாது” என கூறப்பட்டுள்ளது.தொடர்ந்து
விசாரணைகள் நடந்து இந்த வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் 13-ந்தேதி தீர்ப்பு
ஒத்தி வைக்கப்பட்டது.குறித்த காலங்களில் சோதனைஇந்த
வழக்கில் நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஏ.கே.சிக்ரி ஆகியோரைக் கொண்ட
அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில் கூறி
இருப்பதாவது:-குளிர்பானங்களில்
சேர்க்கப்படுகிற பொருட்கள், பொதுமக்களின் உயிர் தொடர்பாக இந்திய அரசியல்
சட்டம் பிரிவு 21 வழங்கியுள்ள அடிப்படை உரிமை தொடர்பானதாகும். எனவே
குளிர்பானங்களில் சேர்க்கப்படுகிற பொருட்களை இந்திய உணவு பாதுகாப்பு
மற்றும் தர சட்ட ஆணையம் கண்காணித்து வரவேண்டும். அத்துடன் குறித்த கால
இடைவெளிகளில் அவ்வப்போது, குளிர்பானங்களை சோதனைக்கும் உட்படுத்த
வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறி உள்ளனர்.
No comments:
Post a Comment