Oct 23, 2013

கோவைக்கு அனுப்ப முயன்ற 960 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்



ஈரோடு, அக்.23&
கோவைக்கு ரயிலில் அனு ப்ப முயன்ற 960 கிலோ புகையிலை பொருட்களை ஈரோட்டில் போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னை எக்மோர்& மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை 8 மணிக்கு ஈரோடு வந்தது. அப்போது அந்த ரயிலில் இருந்து ஏராளமான பார்சல்கள் ஈரோடு ரயில்நிலையத்தில் இறக்கப்பட்டன. பின்னர் அந்த பார்சல்கள் அனை த்தும் ரயில்நிலையத்தில் உள்ள பார்சல் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதில் கோவைக்கு அனுப்பி வைக்க வேண்டிய பார்சல் களை ஊழியர்கள் பிரித்து கோவை செல்லும் ரயிலில் அனுப்பவதற்காக அடுக்கி வைத்திருந்தனர்.
அப்போது அங்கு பாது காப்பு பணியில் ஈடுபட்டி ருந்த ஈரோடு ரயில்வே பாது காப்பு பிரிவு போலீ சார் சந் தேகத்தின்பேரில் பார்சல் களை பிரித்து பார்த்தனர்.
அதில் குட்கா, ஹான்ஸ் உள் ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மொத்தம் 13 பண்டல்களில் இருப்பது தெரியவந்தது. இதையடு த்து 960 கிலோ புகையிலை பொருட்களை ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ் பெக்டர் கணேசன், எஸ்ஐ சுமித் ஆகியோர் கைப்பற்றி ஈரோடு ரயில்வே போலீ சில் ஒப்படைத்தனர். 
 
758 கிலோ புகையிலை ரயிலில் சிக்கியது 
 கோவை, அக்.23:
பெங்களூருரிலிருந்து எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மதியம் 1 மணிக்கு கோவை வந்தது. கடைசி பெட்டியில் சந்தேகத்திற்குரிய 12 பார்சல்கள் இருந்தன.
இந்த பார்சல்கள் சென்னை எழும்பூர் ரயில்நிலைய த்தில் புக் செய்யப் பட்டு, ஈரோட்டில் இருந்து பெங்களூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸில் ஏற்றப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சாம்நாத் தலைமையிலான போலீசார் பார்சலை ஆய்வு செய்தனர். இதில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பொருட்களான ஹான்ஸ் புகையிலைப்பொருள் இருந்தது தெரியவந்தது. இது 250கிராம் பாக்கெட்டுகளாக 758 கிலோ இருந்தது. இதை அடுத்து அந்த பார்சல்களை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பறிமுதல் செய்து ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் தலைமையிலான போலீசார், இந்த பார்சல் எங்கு இருந்து கொண்டுவரப்பட்டது, பார்சலின் உரிமையாளர் யார், பார்சல் யாருக்கு அனுப்பப்பட்டுள்ளது போன்றவற்றை குறித்து விசாரித்து வருகின்றனர்.
 

No comments:

Post a Comment