சென்னை, அக். 23:
ஐஎஸ்ஐ முத்திரை அங்கீகாரம் பெறாத வட்டர் கம்பெனிகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
ஐஎஸ்ஐ முத்திரைக்கான அங்கீகாரம் பெறாத மினரல் வாட்டர் கம்பெனிகளை ஆய்வு செய்து சீல் வைக்குமாறு பசுமை தீர்ப்பாயம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகன்நாதன் தலைமையில் திருப்போரூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, லத்தூர் ஜான் சிம்சன், தோமையார் மலை சுகுமாரன், சித்தாமூர் சுகாநாந்தம் ஆகியோர் அடங்கிய குழுவினர் திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கிராம பகுதிகளில் நடந்து வரும் ஐஎஸ்ஐ அங்கீகாரம் பெறாத மினரல் வாட்டர் கம்பெனிகளை நேற்று ஆய்வு செய்தனர்.
இதில் ஐஎஸ்ஐ அங்கீகாரம் பெறாமல் மூலிகை குடிநீர், சுவையூட்டப்பட்ட குடிநீர் என்ற பெயரில் சோனலூர், வெளிச்சை, தாழம்பூர் ஆகிய 3 இடங்களில் நடந்து வந்த 3 கம்பெனிகளுக்கு சீல் வைத்தனர். தாழம்பூரில் உள்ள கம்பெனிக்கு சீல் வைத்தபோது, அங்கிருந்த கம்பெணியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது, அவர்கள் அதிகாரிகளை தாக்க முயன்றனர். தகவலறிந்து தாழம்பூர் எஸ்ஐ ரகுநாதன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்து சென்றனர். பின்னர் அந்த கம்பெனிக்கு சீல் வைக்கப்பட்டது. கடந்த வாரம், துரைப்பாக்கம் பகுதியில் 13 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இப்போது, மேலும் 3 கம்பெனிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment