வேளச்சேரி, அக். 20:
அடையாறில் 5.5 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட பான்பராக் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அடையாறு
அருணாச்சலபுரம் 2வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட
பான்பராக் மூட்டைகள் சரக்கு லாரியில் இருந்து இறக்கப்படுவதாக சாஸ்திரி நகர்
போலீஸ் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டின் ஜெயசீலுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து
எஸ்.ஐ. தாஸ், முதல்நிலை காவலர் குமரேசன் மற்றும் போலீசார் சம்பவ
இடத்துக்கு சென்று சரக்கு லாரியில் இருந்த 240 மூட்டைகளை பறிமுதல்
செய்தனர். இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
உணவு
பாதுகாப்பு துறை சென்னை மாவட்ட அலுவலர் லட்சுமி நாராயணன் தலைமையிலான
குழுவினர் அவற்றை பறிமுதல் செய்து சைதாப்பேட்டையில் உள்ள அலுவலகத்துக்கு
எடுத்து சென்றனர். இதன் மதிப்பு 5.5 லட்சம் என்று கூறப்படுகிறது. மேலும் விசாரணை நடக்கிறது.
பான்பராக் பறிமுதல் செய்யப்படுகிறது.
No comments:
Post a Comment